/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓ.பி.எஸ்., பதவி ஆசையால் கட்சி, சின்னம் இழந்து சுயேச்சையாக போட்டியிடும் நிலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

ADDED : ஏப் 06, 2024 05:15 AM
சின்னமனூர் : 'ஓ.பி.எஸ்., பதவி ஆசையால் கட்சி, சின்னம் இழந்து சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் உள்ளார் என ஓடைப்பட்டி அ.தி.மு.க. பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது : யார் துரோகம் செய்தது என்பதை தேர்தல் முடிவுகள் கூறும். கட்சியை இழந்து, சின்னத்தை இழந்து சுயேச்சையாக ஓ.பி.எஸ். போட்டியிடுகிறார். பதவி ஆசையால் தான் அவருக்கு இந்த நிலை. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் பரவுகிறது . கடன் வாங்குவதில் முதல் மாநிலம். பழனிசாமி கேள்விகளுக்கு முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை . முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயர்த்த தீர்ப்பு வாங்கி கொடுத்தார் ஜெயலலிதா. இப்போது புதிய அணை கட்டுவேன் என்கிறார் கேரள முதல்வர். அதை தமிழக முதல்வர் கண்டிக்காமல் மவுனமாக உள்ளார்.
கோவில்பட்டியில் எம்.எல். ஏ. தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இன்னும் கூட சொல்லப் போனால், பா.ஜ. வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறியவர் யார் தெரியுமா இந்த தினகரன் தான். இப்போது அவர்களுடன் கை கோர்த்து வருகிறார். இரட்டை இலை அலை வீசுகிறது.
எங்கள் வேட்பாளர் நாராயணசாமி 8 மொழிகளில் பேசும் திறமை படைத்தவர். லோக்சபாவில் உங்களுக்காக வாதாடுவார். பழனிசாமி தான் பாஸ். இரட்டை இலை தான் மாஸ். இவ்வாறு கூறினார்.