/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய 'மாஜி' தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய 'மாஜி' தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய 'மாஜி' தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய 'மாஜி' தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஆக 23, 2024 02:56 AM
தேனி:தேனி மாவட்டம் போடி உறுமிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவரது தந்தை இருளாண்டி வயது மூப்பால், 2012ல் இறந்தார். தந்தை இறப்பு சான்றிதழ் வழங்க கோரி முத்துகுமார், போடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு அப்போது பணியில் இருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் பாலமுருகனை அவர் அணுகினார். முத்துகுமாரிடம் பாலமுருகன், 3,000 ரூபாய் லஞ்சம் வழங்கினால் தான் இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் முத்துகுமார் புகார் அளித்தார். 2012 ஜூலை 26ல் லஞ்சம் பெற்ற பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். மாவட்ட நிர்வாகம், அவரை சஸ்பெண்ட் செய்தது.
இவ்வழக்கு, தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கவிதா, முன்னாள் துணை தாசில்தார் பாலமுருகனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.