/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் தாக்குதல் நால்வர் மீது வழக்கு
/
பெண் தாக்குதல் நால்வர் மீது வழக்கு
ADDED : மே 09, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய நால்வர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் அருகே கைலாச பட்டி அம்பேத்கர் காலனி கோவிந்தம்மாள் 53. இவரது கணவர் சின்னச்சாமி 56. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இவர்களது மகன் செல்வம், சின்னச்சாமிக்கு கிடைத்த பாகச்சொத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியுள்ளார்.
இதனால் சின்னச்சாமியின் உறவினர்களான முத்துகிருஷ்ணன், பன்னீர்செல்வம், இவரது மனைவி அன்னகாமு, உறவினர் முத்துலட்சுமி ஆகியோர் கை, குச்சியால் கோவிந்தம்மாளை தாக்கி காயப்படுத்தினர். தென்கரை போலீசார் முத்துகிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.