/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம் வாங்கியவர் மோசடி:தம்பதி தற்கொலை முயற்சி
/
பணம் வாங்கியவர் மோசடி:தம்பதி தற்கொலை முயற்சி
ADDED : ஆக 09, 2024 02:10 AM

பெரியகுளம்,:பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரம் அருகே சருத்துப்பட்டி சிந்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 39. கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியபாமா, 38. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வெங்கடேசனிடம் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய வெங்கடேசன் தன்னிடமிருந்து ரூ.10 லட்சத்தை முன்னாள் ராணுவ வீரரிடம் கொடுத்தார்.
ஓரிரு மாதங்கள் வட்டி கொடுத்த அவர் அதன் பிறகு கொடுக்கவில்லை. கடந்த மாதம் பணம் கேட்டு அவரது வீட்டில் குடும்பத்துடன் வெங்கடேசன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தனது மகளை கல்லுாரியில் சேர்க்க பணம் இல்லையே என மனவேதனையில் நேற்று தோட்டத்தில் வெங்கடேசன் விஷமருந்து குடித்தார்.
இதனையறிந்த சத்யபாமா வீட்டில் விஷம் குடித்தார். இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.