/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளர் வீடுகளில் அடிக்கடி தீவிபத்து: அலட்சியத்தில் நிர்வாகம்
/
தொழிலாளர் வீடுகளில் அடிக்கடி தீவிபத்து: அலட்சியத்தில் நிர்வாகம்
தொழிலாளர் வீடுகளில் அடிக்கடி தீவிபத்து: அலட்சியத்தில் நிர்வாகம்
தொழிலாளர் வீடுகளில் அடிக்கடி தீவிபத்து: அலட்சியத்தில் நிர்வாகம்
ADDED : ஏப் 04, 2024 03:58 AM
மூணாறு : மூணாறில் கே.டி.எச்பி. கம்பெனிக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் தொழிலாளர்கள் வீடுகள் மின்கசிவு மூலம் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றபோதும் அதற்கு தீர்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
அந்த கம்பெனியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமாக நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மூணாறு நகர் உள்பட எஸ்டேட் பகுதிகளுக்கு கம்பெனி சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்காததால் மின்கசிவு மூலம் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் நான்கு தீ விபத்துகளில் 25 வீடுகள் தீக்கிரையாகின.
இதேகம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் ஜன.11ல் இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எட்டு வீடுகள், பெரியவாரை எஸ்டேட் சோலமலை டிவிஷனில் பிப்.8ல் இரவில்தீப்பற்றி ஏழு வீடுகள், நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் மார்ச் 26ல் பகலில் தீப்பற்றி ஒரு வீடு, நெற்றிக்குடி எஸ்டேட் சென்டர் டிவிஷனில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வீடுகள் என 25 வீடுகள் தீக்கிரையாகின. பொருட்கள் அனைத்தையும் இழந்த தொழிலாளர்கள் மாற்று உடை இன்றி வீதிக்குவந்தனர்.மின்கசிவு மூலம் அடிக்கடி தீவிபத்துக்கள் ஏற்பட்டும், தொழிலாளர்களின் வீடுகளில் மின் இணைப்புகளை சீரமைக்காமல் கம்பெனி நிர்வாகம் அலட்சியம் காட்டி வரும் நிலையில் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே இதே கம்பெனியில் ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக.6 இரவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 70 தமிழர்கள் உயிரிழந்தனர். அது போன்று தீ விபத்துகள் மூலம் தமிழர்களின் உயிர்கள் காவு வாங்க வாய்ப்புள்ளது.

