/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்கள் புதிய விஷயங்களை கற்று திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பேச்சு

ADDED : மார் 02, 2025 05:21 AM

தேனி: 'மாணவர்கள் புதிய விஷயங்களை கற்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்', என தேனியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் பேசினார்.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் மகேஷ், துணைத்தலைவர் பாண்டியராஜ், பொருளாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் பேசுகையில், 'இந்தியாவில் தற்போது மேல்நிலைக்கல்வி படித்தவர்களில் 30 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கின்றனர். இந்த நிலை 2035ல் உயர்கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக மாறும். கல்லுாரி நிர்வாகம் கல்வியில் மாணவர்கள் முன்னேற பல்வேறு வகையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. பிறருக்கு நல்லது செய்ய நினைத்தாலே நாம் வளரலாம். வறுமை, வீட்டு சூழல், பிறந்த இடம் உள்ளிட்டவை முன்னேற்றத்திற்கு எப்போதும் தடையில்லை. பட்டப்படிப்புடன் நின்று விடாமல் புதிய, பிடித்த விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டால் மேலே வர முடியும். வாழக்கையில் டிகிரி ஒரு பாஸ்போர்ட் தான். கடின உழைப்பு, திறமை இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.' என்றார். மதுரை காமராஜர் பல்கலையில் பொதுத்தமிழ் பாடத்தில் 5 வது வரிசையில் தேர்ச்சி பெற்ற கணித துறை மாணவி ரம்யாவிற்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இளங்கலை, முதுகலை தேர்ச்சி பெற்ற 363 மாணவர்களுக்குபட்டங்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.