/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 02, 2024 12:14 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளுடன் போலீஸ், வருவாய்த் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
உத்தமபாளையத்தில் விநாயகர் சதூர்த்தி விழா நடத்துவது தொடர்பாக உத்தமபாளையம்,போடி பகுதிகளை சேர்ந்த ஹிந்து முன்னணி,ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கடந்தாண்டு நடந்தது போல அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த வலியுறுத்தப்பட்டது.
அனுமதி பெற்ற பின் தான் சிலைகளை நிறுவ வேண்டும், அனுமதி பெறாத இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஹிந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் நிபந்தனைகளை கடுமையாக்கி வருகிறீர்கள் என குற்றம் சாட்டப்பட்டது.