/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் கரையில் குவியும் குப்பை
/
18ம் கால்வாய் கரையில் குவியும் குப்பை
ADDED : ஏப் 27, 2024 05:07 AM

கூடலூர்: 18ம் கால்வாய் கரையில் குவியும் பாலிதீன் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். கூடலுார் புறவழிச்சாலையை ஒட்டி செல்லும் இக்கால்வாயின் கரை பகுதியில் குப்பை அதிக அளவில் கொட்டப்படுகிறது. காற்று அதிகம் வீசும் போது பாலிதீன் கழிவுகள் காற்றில் பறந்து விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கால்வாய் கரையில் குப்பை கொட்டுபவர் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

