/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளாடு வளர்ப்பு: விவசாயிகள் ஆர்வம்
/
வெள்ளாடு வளர்ப்பு: விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 13, 2025 05:56 AM
ஆண்டிபட்டி: பங்குனி, சித்திரை மாதங்களில் கிராம பொங்கல் விழாக்கள் துவங்கும் நிலையில் வெள்ளாடுகளுக்கான தேவை அதிகரிக்கும். இதனை கணக்கில் கொண்டு ஆண்டிபட்டி பகுதி கிராமங்களில் விவசாயிகள் வெள்ளாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆடு வளர்ப்பை உப தொழிலாக கொண்டுள்ளனர்.
ஆடு வளர்ப்பில் வெள்ளாடுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். 6 முதல் ஓராண்டு வரை வளர்க்கப்படும் வெள்ளாடுகள் பல ஆயிரம் வரை லாபம் தருவதாக உள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து குட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து வளர்க்கும் தொழிலை தொடர்கின்றனர்.
ஆடு வளர்ப்பவர்கள் கூறியதாவது: மேய்ச்சல் நிலங்களுக்கு சென்று வரும் ஆடுகளுக்கு எப்போதும் கிராக்கி தான். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை கிராம பொங்கல் விழா களுக்கான மாதங்கள் ஆகும். அடுத்த சில மாதங்களில் துவங்கும் ஆடி பண்டிகையில் ஆடுகளின் தேவை அதிகமாகும்.
இவைகளை கணக்கில் கொண்டு தற்போது விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் ஆர்வமாக உள்ளனர். ஆடு வளர்ப்பில் செய்யும் முதலீடு அடுத்த ஆறு மாதங்களில் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது என்றனர்.