/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மெழுகுவர்த்தி ஏந்தி அரசு டாக்டர்கள் ஊர்வலம்; போக்குவரத்து பாதிப்பு
/
மெழுகுவர்த்தி ஏந்தி அரசு டாக்டர்கள் ஊர்வலம்; போக்குவரத்து பாதிப்பு
மெழுகுவர்த்தி ஏந்தி அரசு டாக்டர்கள் ஊர்வலம்; போக்குவரத்து பாதிப்பு
மெழுகுவர்த்தி ஏந்தி அரசு டாக்டர்கள் ஊர்வலம்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 17, 2024 01:17 AM

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவ கல்லுாரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவமனைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், பயிற்சி மேற்படிப்பு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கறுப்பு 'பேட்ஜ்' அணிந்து நேற்று எதிர்ப்பு தெரிவித்து பணிபுரிந்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து, அமைதி ஊர்வலமாக முன்புற ரோட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர்.
மாவட்டத் தலைவர் டாக்டர் அறவாழி தலைமை வகித்தார்.
செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் பின் மதுரை தேனி ரோட்டிற்கு வந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் 20 நிமிடங்களுக்கு பின் சென்றது.
இதில் அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

