sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு வேலை மோகத்தால் மோசடியில் சிக்கும் பட்டதாரிகள், இன்ஜினியர்கள்; சைபர் குற்றங்களில் தேனி இரண்டாமிடம்

/

அரசு வேலை மோகத்தால் மோசடியில் சிக்கும் பட்டதாரிகள், இன்ஜினியர்கள்; சைபர் குற்றங்களில் தேனி இரண்டாமிடம்

அரசு வேலை மோகத்தால் மோசடியில் சிக்கும் பட்டதாரிகள், இன்ஜினியர்கள்; சைபர் குற்றங்களில் தேனி இரண்டாமிடம்

அரசு வேலை மோகத்தால் மோசடியில் சிக்கும் பட்டதாரிகள், இன்ஜினியர்கள்; சைபர் குற்றங்களில் தேனி இரண்டாமிடம்


ADDED : ஜூன் 28, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அரசு வேலைமீதுள்ள மோகத்தால்மோசடியில் சிக்கி தேனி மாவட்ட இன்ஜினியர்கள், பட்டதாரிகள்பணத்தை இழப்பதாகசைபர் கிரைம் புள்ளி விபரம் தெரிவிக்கின்றன.

தேனி மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் 2வது தளத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் இயங்குகிறது.

இங்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தொழில்நுட்ப எஸ்.ஐ., போலீசார் 20 பேர் உளளனர். இங்கு காணாமல் போன அலைபேசிகளை கண்டறியும் சைபர் செல், மீடியா விளம்பரபிரிவு தனியாக இயங்குகிறது. மாநிலத்திலேயே அதிகளவில் சைபர் குற்றங்களில் தேனி மாவட்ட பொறியியல், முதுநிலை பட்டதாரிகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம்கூறுகிறது.

இதனால் சைபர் மோசடிகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்வதுடன் தொழில்நுட்பஅறிவை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து தினமலர் நாளிதழின்அன்புடன் அதிகாரி பகுதிககாக எஸ்.ஐ.,தாமரைக்கண்ணன் பேசியதாவது:

மாவட்டத்தில் சைபர் கிரைமில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன


2021ல் 287 புகார்களில் ரூ.10.15 லட்சம் மோசடியில் ரூ.2.30 லட்சமும், 2022ல் பெறப்பட்ட 802 புகார்களில்இழப்பீடான ரூ.54 லட்சத்தில் ரூ.40 லட்சம் கைப்பற்றியுள்ளோம்.

2023 ல் அதிகபட்சமாக 1309 புகார்கள் பெற்று அதில் ரூ.7.54 கோடி இழப்பீட்டில், ரூ.28 லட்சம் மீட்கப்பட்டுள்ளன. 2023 ல் 665 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ரூ.4.54 கோடி இழப்பீட்டில் ரூ.3 லட்சம் மீட்டு உரியவர்களிடம் வழங்கியுள்ளோம்.

எந்த விதமான மோசடி அதிகரிக்கிறது.


அங்கீகாரம் அற்ற ஆன்லைன் செயலிகளால் கடன் வழங்குவதாக மோசடி செய்வதில் 380 புகார்கள்,வங்கிகளில் இருந்து பேசுவதாக அலைபேசியில் அழைத்துஓ.டி.பி., எண் கேட்டு மோசடி செய்ததில்50 புகார்கள், தனிநபர் கடன் வழங்குவதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி மோசடியில் 100 புகார்கள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வலியுறுத்தி வரும் தகவல்களால் மோசடியில் 25 புகார்கள், கிரிடிட் கார்டு மோசடி 50 புகார்கள்,ஆன்லைனில் டாஸ்க்' செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனமோசடியில் 300 புகார்கள், அரசு, ரயில்வேத்துறையில் வேலை வாங்கித்தருவாக மோசடியில் 250 புகார்கள், வாட்ஸ் ஆப் செயலியில் கே.ஒய்.சி., கேட்டு மோசடியில் 210 புகார்கள், ஓ.எல்.எக்ஸ், தளத்தில் இரண்டாம் நபர் பொருட்களைவிற்பனை செய்வதாக மோசடியில் 10 புகார்கள், பரிசுத்தொகை வழங்குவதாக குறுந்தகவல் அனுப்பி மோசடியில் 50 புகார்கள், பர்சேஸ் செய்ய வரும் விளம்பர தகவல் மோசடியில் 190 புகார்கள், அலைபேசி ஸ்கிரீன் ஷேரிங் மூலம் மோசடியில் 55 புகார்கள், அலைபேசி டவர் சர்வீஸ் நிறுவனம் எனக்கூறி மோசடி 8 புகார்கள், சோசியல் மீடியா, முகநுாலில் ஆபாச படம் மாபிங்செய்து விடுவேன் என மிரட்டி பணம் பறிக்கும் மோசடி 12 புகார்கள், என 14 வகைகளாக சைபர் குற்றங்களை பிரித்துள்ளோம்.

இதில் அதிகமாக அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளில் மோசடி செய்யப்பட்டு பாதிக்கப்படுவவோர் மட்டுமே 380 பேர்உள்ளனர்.

பாதிக்கப்படுவர்கள் படித்தவர்களா, பாமரர்களா


அரசு, ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கிடைக்கும் விளம்பரங்கள் பார்த்து மோசடி செய்வது அதிகரித்துள்ளது.அதில் 250 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர் படித்த பொறியாளர்களாக, முதுகலை பட்டதாரிகளாக உள்ளது வேதனைஅளிக்கிறது.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இம்மாதிரியாக அரசு வேலை என கருதி ஏமாறுவோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது. படித்தவர்கள்தான் ஏமாறுகிறாரகள். பெரும்பாலும் படித்த பெண்கள், முதுகலை பட்டதாரிகள் அதிகளவில் ஏமாற்றம் அடைந்து மோசடியில் சிக்கியுள்ளனர்.

பதிவான வழக்குகள் எத்தனை, கைதானவர்கள் எத்தனை பேர்


இதுவரை 132 வழக்குகள் பதிவு செய்து, 65 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

மேலும் சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் இணையத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எஸ்.பி., உத்தரவில் பள்ளி, கல்லுாரிகளில் நான், தொழில்நுட்ப பிரிவு எஸ்.ஐ., முத்துப்பாண்டியன் இதர போலீசார் மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சைபர் மோசடிகளை தவிர்க்க என்ன செய்வது


தொழில்நுட்பங்கள் குறித்த போதிய அறிவு இல்லாமல் சைபர் கிரைம் குற்றங்களில் மாவட்டத்தில் பாதிக்கப்படும் படித்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சைபர் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்பாடுகள் பற்றி படித்து தெரிந்து கொள்ளவேண்டும். அது குறித்த அறிவை மேம்படுத்தினால் மட்டுமே சைபர் மோசடிகளில் இருந்து தப்பிககு முடியும்.உதாரணத்திற்கு வாட்ஸ் ஆப் அப்டேட் நம் அலைபேசியில் வந்தால், அதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்கி பரிவர்த்தனை நடைமுறை, அங்கீகரிக்கப்படாத செயலிகள், இணையதளங்களுக்கு சென்று பார்ப்பதை நிறுத்தினாலே சைபர் மோசடிகளில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்., என்றார்.






      Dinamalar
      Follow us