/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு வெடிப்பதினால் குப்பையாக மாறும் கூடலுார்
/
பட்டாசு வெடிப்பதினால் குப்பையாக மாறும் கூடலுார்
ADDED : ஜூலை 07, 2024 11:57 PM
கூடலுார் : கூடலுாரில் நடைபெறும் விஷேச நிகழ்ச்சிகளில் அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் ரோடு, தெருக்கள் முழுவதும் குப்பையாக மாறி வருகிறது.
கூடலுாரில் காதணி விழா, வசந்த விழா, திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் பட்டாசு வெடிப்பதை கட்டாயமாக்கி உள்ளனர். தெருக்கள், மெயின் பஜார், மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பட்டாசு வெடிப்பதில் வெளியேறும் பேப்பர் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புகையால் மாசு ஏற்படுகிறது. சமீபத்தில் பட்டாசு வெடிக்கும் போது வெளியேறிய தீப்பிழம்பு சிறுமி கண்ணில் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மக்கள் மன்றம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அனைத்து சமுதாய அமைப்புகளும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.