/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹிந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம்
/
ஹிந்து எழுச்சி முன்னணி ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 01, 2024 06:08 AM
தேனி : மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், அல்லிநகரம் தலைமை அலுவலகத்தில் வார வழிபாடு, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி நகரச் செயலாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். தேனி நகர துணைத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிவராமன் ஆலோசனை தெரிவித்தார். டி 20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தல், தேனி - பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நிரந்தர போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்து சிரமத்தை குறைக்க விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.