/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரதோஷங்களில் எத்தனை வகை ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம்
/
பிரதோஷங்களில் எத்தனை வகை ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம்
பிரதோஷங்களில் எத்தனை வகை ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம்
பிரதோஷங்களில் எத்தனை வகை ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம்
ADDED : ஆக 20, 2024 06:59 AM
கம்பம் : பிரதோஷங்களில் பங்கேற்பதால் என்ன பயன், பிரதோஷங்கள் எத்தனை வகை என்று கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மோகனவேலு விளக்கம் அளித்தார்.
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் ஆவணி முதல் நாள் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் மோகனவேலு பங்கேற்று பேசியதாவது: பிரதோஷங்கள் நித்திய பிரதோஷம், சனிப்பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என ஐந்து வகை உள்ளது.
அதில் சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷத்தில் சிவனை வழிபடுவர்களுக்கு சிவபெருமான் அருளும், வைகுண்ட பதவியும் ஒரு சேர கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கிருபானந்த வாரியர் சுவாமிகளுக்கு இரண்டு சுற்று ஏழரை நாட்டு சனி வந்தது.
ஆனால் ஒரு துன்பமும் அவரை அண்டவில்லை. காஞ்சி மகா பெரியவர் இருக்கும் இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவிற்கு நவக்கிரகங்கள் வேலை செய்யாது என்று வேதங்கள் கூறுகின்றன.
நவக்கிரக பாதிப்புக்களில் இருந்து தப்பிக்க இறைவழிபாடு, குருவழிபாடு செய்து வந்தால் போதும், நவக்கிரகங்கள் நன்மையே செய்வார்கள். இவ்வாறு பேசினார்.
நிறைவாக கோயில் நிர்வாகம் சார்பில் பேராசிரியருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.

