/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
/
வாழையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி
ADDED : மே 19, 2024 11:49 PM
உத்தமபாளையம் : மதுரை வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி சவுமியா தலைமையில் மாணவிகள் குழு பண்ணைப் புரத்தில் வாழை விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை விளக்கினர்.
கிராமப்புற பணி அனுபவ திட்டத்தின் கீழ் இப்பகுதியில் தங்கியுள்ள மாணவிகள், விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.
வாழை பயிரை தாக்கும் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஒட்டுப் பொறி மூலம் கவர்ந்திழுத்து அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் மட்டும் இல்லாமல் பல பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்தும் பொறியாகும்.
பெரிய இலைப் புழுக்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒரு எக்டேருக்கு 15 பொறிகளை வைத்தால், வெள்ளை ஈக்களை அழிக்க முடியும் என்று விளக்கினர்.

