/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'நான் வேட்பாளர் இல்லை நீங்கள்தான்' என அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
'நான் வேட்பாளர் இல்லை நீங்கள்தான்' என அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
'நான் வேட்பாளர் இல்லை நீங்கள்தான்' என அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
'நான் வேட்பாளர் இல்லை நீங்கள்தான்' என அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 04, 2024 11:51 PM
ஆண்டிபட்டி : 'வேட்பாளர் நான் இல்லை நீங்கள் தான், உங்களுக்காக ஓட்டு கேட்கிறேன்' வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.
தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நேற்று திம்மரசநாயக்கனூரில் துவங்கி பொம்மிநாயக்கன்பட்டி பிச்சம்பட்டி, ஆண்டிபட்டி உட்பட 50 கிராமங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது: அ.தி.மு,க., வேட்பாளர் நான் இல்லை, பொதுமக்களாகிய நீங்கள் தான் வேட்பாளர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பொதுச் செயலாளர் பழனிசாமி, மக்களிடம் சென்று பணிவாக ஓட்டு கேட்க கூறி அனுப்பியுள்ளார். உங்களுக்காக ஓட்டு கேட்கிறேன். வெற்றி பெறச் செய்தால் மக்களுக்குத்தேவையான வளர்ச்சிக்கான திட்டங்களை பெற்றுத்தருவேன். இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
வேட்பாளர் நாராயணசாமியை எதிர்த்து நிற்கும் தி.மு.க.,வேட்பாளர் இதற்கு முன் அ.தி.மு.க.,வில் இருந்தார். பின் இதே தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்றார். ஒரு தேர்தலுக்கு ஒரு கட்சி ஒரு சின்னத்தில் நிற்கிறார். பா.ஜ.,வில் சுயேச்சை சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் 15 ஆண்டுகள் மக்கள் பணியை மறந்து சென்றார். இப்பொழுது மீண்டும் தேடி வந்திருக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளில் பல அழுத்தங்கள், சோதனைகள், நெருக்கடிகள் வந்தபோதும் ஒரே கட்சி, ஒரே சின்னம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தந்த இரட்டை இலை சின்னம் என்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் பங்கேற்றனர்.

