/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டியில் இரு அகல் விளக்கு தீபம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை பக்தர்கள் அதிர்ச்சி
/
வீரபாண்டியில் இரு அகல் விளக்கு தீபம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை பக்தர்கள் அதிர்ச்சி
வீரபாண்டியில் இரு அகல் விளக்கு தீபம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை பக்தர்கள் அதிர்ச்சி
வீரபாண்டியில் இரு அகல் விளக்கு தீபம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : மே 02, 2024 05:51 AM
தேனி: வீரபாண்டி சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயில் சுற்றுப் பிரகாரங்களில் இரு அகல்விளக்கு தீபம் ரூ.30க்கும், இரு மாவிளக்குகள் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று அங்கபிரதட்சனம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர். சிலர் வேண்டுதல்கள் நிறைவேற கோயிலில் அம்மன் சன்னதி, சப்த கன்னிமார் சன்னதி ஆகிய இடங்களில் நெய் விளக்குகள் ஏற்றி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் விளக்குகள் வாங்கிக் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ஆனால் அவ்வாறு வரும் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் கோயில் வளாகம், மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் இரு அகல் விளக்கு தீபங்கள் ரூ.30, இரு மாவிளக்குகள் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் செய்வதறியாது, வேறு வழியின்றி இதனை வாங்கிச் செல்கின்றனர். அகல் விளக்குகள், மாவிளக்குகள் உரிய விலையில் விற்பனை செய்யவும், அதன் விலைப் பட்டியலை பக்தர்களுக்கு தெரியும் வகையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஏலம் எடுத்தவர்கள் குறிப்பிட்ட விலைதான் விற்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிர்வாகம் சார்பில் நெய் விளக்குகள் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.', என்றனர்.

