ADDED : ஆக 16, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மெயின்ரோட்டில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையின் கை பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் சேதப்படுத்தினார். அதன்பின் சிலை மூடி வைச்சுப்பட்டு சில மாதங்களாக பராமரிப்பு பணி நடந்தது.
நேற்று காலை சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது.
நகர் காங். தலைவர் போஸ் தலைமையில் மாவட்ட தலைவர் முருகேசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

