/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்ரீ சீதாராமா பஜனை மடம் திறப்பு விழா
/
ஸ்ரீ சீதாராமா பஜனை மடம் திறப்பு விழா
ADDED : ஜூன் 11, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையம் பாறையடி கருப்பசாமி - கோயில் அருகில் இதே ஊரை சேர்ந்த ராமபக்தர் முத்துராமன், சிவகாமி தம்பதியினர் ஸ்ரீ சீதாராமா பஜனை மடத்தை புதிதாக நிறுவியுள்ளனர். இதன் திறப்பு விழா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ராமர் - சீதை படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பஜனை மடத்தை அதன் ஸ்தாபகர் முத்துராமன் திறந்து வைத்தார்.
அன்னதானம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு தினமும் ராமநாம கீர்த்தனைகள் நடைபெறும் என்றும், பக்தர்களின் இல்லங்களுக்கு குழுவாக சென்று ராமநாமம் ஜெபிக்கப்படும் என்றும் ராமபக்தர் முத்துராமன் கூறினார்.