ADDED : ஆக 11, 2024 05:13 AM

தேனி, : சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் 'உலக உயிர்கள் மாநாடு' தேனியில் நேற்று துவங்கியது.
தேனி வீரபாண்டியில் உலக உயிர்கள் மாநாடு துவங்கியது.
முதல் நிகழ்வாக வள்ளலார் படத்துடன் சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் மண்டபத்தில் இருந்து கவுமாரியம்மன் கோயில் வரை சென்று, மீண்டும் மண்டத்திற்கு திரும்பினர். மாநில தலைவர் அருள் நாகலிங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
பின் சொற்பொழிவு நடந்தது. இதில் ஆத்மஞானம், சன்மார்க்கமே நன்மார்க்கம், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். தேனி மாவட்ட தலைவர் அருள்வீராச்சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் இந்திரஜித், வடலுார் குருபக்கிரிசாமி, மாவட்ட ஆலோசகர் வீரமணி, பேச்சாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இன்று காலை 8:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து காலை 9:30 மணி முதல் 4 மணி வரை சொற்பொழிவும் நடக்க உள்ளது. நிகழ்ச்சிகளை சங்க மாவட்ட செயலாளர் சிவஜோதி ஒருங்கிணைத்தார்.