ADDED : மே 05, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
இவர் மேலச் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜீவபாரதி 24.யிடம் ் மண் அள்ளும் இயந்திரத்தை கொடுத்து வேலைக்கு அனுப்பியுள்ளார். மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுவர் இடிக்கும் பணி செய்த போது கற்கள் உருண்டு காலில் விழுந்தது. பலத்த காயம் அடைந்த ஜீவபாரதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.