/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்திற்கு தனி சர்வேயர் நியமிக்க வலியுறுத்தல்
/
கம்பத்திற்கு தனி சர்வேயர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2024 05:39 AM
கம்பம்: கம்பம் நகராட்சிக்கென தனி சர்வேயர் நியமிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.
கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா (தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் அரசகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் சாதிக் பேசுகையில், நகராட்சிக்கென தனி சர்வேயர் நியமிக்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றார்.
பதிலளித்த தலைவர், வருவாய்த் துறையில் சர்வேயர் உள்ளார். நகராட்சிக்கென தனியாக சர்வேயர் வேண்டும் என்றால் கலெக்டரை சந்தித்து முறையிட வேண்டும் என்றார். கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 27 பேர் கலந்து கொண்டனர்.