/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு பொருட்கள் வினியோக மையங்களில் ஆய்வு
/
ஓட்டுப்பதிவு பொருட்கள் வினியோக மையங்களில் ஆய்வு
ADDED : ஏப் 04, 2024 11:49 PM
மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் ஓட்டுச்சாவடி, ஓட்டுப் பதிவின்போது பயன்படுத்தும் பொருட்களை வினியோகிக்கும் மையங்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரி ஷீபா ஜார்ஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
இடுக்கி லோக்சபா தேர்தல் ஏப்.26ல் நடக்கிறது. அதனையொட்டி ஓட்டுச் சாவடிகள், ஓட்டுப் பதிவின்போது பயன்படுத்தும் பொருட்களை வினியோகிக்கும் மையங்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
இடுக்கி லோக்சபா தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளை கொண்டதாகும். இடுக்கி மாவட்டத்தில் ஐந்தும், எர்ணாகுளம் மாவட்டத்தில் இரண்டும் உள்ளன. அதில் இடுக்கி சட்டசபை தொகுதி வாரியாக பொருட்கள் வினியோகிக்கும் மையங்களில் ஆய்வு நடந்தது.
அதன்படி தேவிகுளம் தொகுதியில் மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளி, உடும்பன்சோலை தொகுதியில் புனித செபாஸ்டியன் பள்ளி, பீர்மேடு தொகுதியில் மரியகிரி ஆங்கில மீடியம் பள்ளி, தொடுபுழா தொகுதியில் நியூமேன் கல்லூரி, இடுக்கி தொகுதியில் பைனாவ் மாதிரி உண்டு, உறைவிட பள்ளி ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார். மாவட்ட எஸ்.பி. விஷ்ணு பிரதீப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர்உடனிருந்தனர்.

