/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல்
/
தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல்
ADDED : மே 17, 2024 06:52 AM
தேனி : மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சாகுபடி செய்துள்ள தோட்டக்லை பயிர்களை உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாத்திட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் தோட்டங்களில் அமைத்துள்ள மா,பலா, முந்திரி, கொய்யா, எலும்பிச்சை பயிர்களில் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் குவித்து வைக்க வேண்டும். மிளகு கொடி வேர்பகுதிகளில் பூஞ்சான உயிரியியல் மருந்துகளைஇட வேண்டும். திராட்சை கொடி, கொக்கோ செடிகளில் போர்டோ கலவை பசையினை பூச வேண்டும். கொக்கோ , கிராம்பு, ஜாதிக்காய் செடிகள் காற்றில் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சி கட்ட வேண்டும். வாழையில் 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த மரங்களை அறுவடை செய்திட வேண்டும். மரத்தின் அடியில் மண் அணைத்து நீர் தேங்காதவாறு செய்திட வேண்டும். மேலும் கத்தரி, முட்டைக்கோசு, கொத்தமல்லி, தக்காளி போன்ற பயிர்களுக்குகாப்பீடு செய்திட வேண்டும். வயல்களில் நீர்தேங்காமல் வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாய்ச்சுதல், உரமிடுதலை தற்காலிகமாக நிறுத்தி பயிர்களை பாதுகாப்பு செய்திட வேண்டும் என தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

