/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்
/
சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2024 05:05 AM
தேனி: விவசாயிகள் டி.ஏ.பி., உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்ததல் இந்தாண்டில் இதுவரை நெல் 703 எக்டேர், சிறுதானியங்கள் 114, பயறுவகைகள் 558, எண்ணெய்வித்து பயிர்கள் 315 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 2312 டன், டி.ஏ.பி., 512 டன், பொட்டாஷ் 566டன், காம்ளக்ஸ் 4123 டன் தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.உரங்கள் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், பில் வழங்காமல் விற்பனை செய்தாலோ, அல்லது பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினாலோ விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர்களிடம் புகார் அளிக்கலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் உள்ளது. இதனை எண்ணெய்வித்து பயிர்களில் பயன்படுத்தும் போது மகசூல் அதிகரிப்பதுடன், எண்ணெய் அதிகளவில் கிடைக்கும்.
டி.ஏ.பி., உரம் மண்ணில் உப்பு தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஒப்பிடுகையில் சூப்பர் பாஸ்பேட் உரம் குறைந்த அளவு உப்பு தன்மை ஏற்படுத்துகிறது. எனவே விவசாயிகள் டி.ஏ.பி., உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம். மாவட்டத்தில் 350 டன் உரம் கையிருப்பில் உள்ளது. என்றார்