/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செலவு கணக்கு சரியாக சமர்ப்பிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தல்
/
செலவு கணக்கு சரியாக சமர்ப்பிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தல்
செலவு கணக்கு சரியாக சமர்ப்பிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தல்
செலவு கணக்கு சரியாக சமர்ப்பிக்க வேண்டும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தல்
ADDED : மார் 31, 2024 04:30 AM

தேனி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை சரியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தேனி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. தேர்தல் பொதுப்பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா, செலவீன பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி, விஜேந்திரகுமார் மீனா முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பொதுக்கூட்டம்,பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் நாற்காலி, வாகனம், விளக்குகளையும் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீடியோ கண்காணிப்பு குழு பதிவிடும் நிழல் அறிக்கை வேட்பாளர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தேர்தல் செலவுகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக தனி வங்கி கணக்கு பராமரிக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் பணம், பரிசு பொருட்கள், மது உள்ளிட்டவை வழங்க கூடாது. மீறி வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.

