/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எல்லையில் வாகன சோதனை தீவிரம் - சிறு வியாபாரிகள் கலக்கம்
/
எல்லையில் வாகன சோதனை தீவிரம் - சிறு வியாபாரிகள் கலக்கம்
எல்லையில் வாகன சோதனை தீவிரம் - சிறு வியாபாரிகள் கலக்கம்
எல்லையில் வாகன சோதனை தீவிரம் - சிறு வியாபாரிகள் கலக்கம்
ADDED : மார் 29, 2024 05:55 AM

கூடலுார் : குமுளி எல்லையில் வாகனச் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசுப் பொருள் வழங்கலைத் தடுக்க 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட தேர்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஷிப்ட் முறையில் இக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து குமுளி வழியாக தமிழக பகுதிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.
சமீபத்தில் கேரளாவில் இருந்து தமிழப்பகுதிக்கு வந்தவரிடம் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சோதனை மேலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகள் கூறும் போது:
இறைச்சிக்காக மாடுகளை வாங்க வாரந்தோறும் கேரளாவிலிருந்து வியாபாரிகள் அதிகம் வருவார்கள். மேலும் தமிழகப் பகுதியில் இருந்து காய்கறிகள் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் பணப்பரிவர்த்தனை அதிக அளவில் நடைபெறும். காய்கறிகள் வாங்குவதற்கும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும் பில் பெற முடியாது.
ரூ.50 ஆயிரம் வரை அனுமதி இருந்தாலும் மொத்த வியாபாரம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் காய்கறி, பால் வியாபாரிகளுக்கு சலுகை வழங்க வேண்டும், என்றனர்.

