/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சோதனையை தீவிரப்படுத்துங்க
/
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சோதனையை தீவிரப்படுத்துங்க
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சோதனையை தீவிரப்படுத்துங்க
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சோதனையை தீவிரப்படுத்துங்க
ADDED : ஜூன் 16, 2024 05:22 AM
மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆர்வமாக பள்ளி நோக்கி வருகின்றனர். ஆனால் பள்ளிகளில் அருகில் உள்ள பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள், டீக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை தங்கு தடையின்றி தாராளமாய் விற்பனை நடக்கிறது. பள்ளியில் இருந்து குறிப்பிட்ட துாரத்திற்குள் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்ற விதியிருந்தாலும், அதனை மீறி விற்பனை செய்கின்றனர்.
இந்த கடைகளுக்கு பள்ளி மாணவர்கள் நண்பர்களுடன் வந்து 'கெத்து' காட்டும் நினைப்பில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. சிலர் மற்ற நண்பர்களுக்கு போதை பாக்கு, புகையிலை பயன்பாட்டை கட்டாயப்படுத்தி திணிக்கின்றனர். இதுபோன்ற மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்கும் சமூக விரோதிகள் நடமாட்டம் பள்ளி பகுதிகளில் உள்ளது.
சில நாட்களுக்கு முன் ஆண்டிபட்டி பகுதியில் போதை மாத்திரை விற்ற மூவரை கைது செய்தனர். இதன் தீமையை புரிந்து கொள்ள இயலாத இளம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக வாழ்க்கையை தொலைக்கும் அவலத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள், உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து செயல்பட வேண்டும் அரசு சில மாதங்களுக்கு முன் அறிவுறுத்தியது. ஆனால் அந்த உத்தரவு தற்போது கானல் நீராக உள்ளது. பள்ளிகள் அருகே போதை பாக்கு, புகையிலை விற்பனை ஜோராக உள்ளது.
கடந்த ஆண்டு போலீஸ், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி துறைகள் இணைந்து சோதனையை தீவிப்படுத்தினர். பின்னர்
தனியாக சோதனைக்கு செல்லும் அலுவலர்கள் உள்ளூர்காரர்கள், அறிமுகமானவர்கள் என காரணம் கூறி கண்துடைப்பு சோதனை செய்து பெயரளவில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருதி போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கூட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தவும், சோதனைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆவர்லர்கள் வலியுறுத்தி உள்ளனர்.