/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரிய விலை கிடைப்பதால் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம்
/
உரிய விலை கிடைப்பதால் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம்
உரிய விலை கிடைப்பதால் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம்
உரிய விலை கிடைப்பதால் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம்
ADDED : ஜூலை 16, 2024 04:56 AM
ஆண்டிபட்டி : விளைந்த மக்காச்சோளத்திற்கு விலை கிடைப்பதால் ஆண்டிபட்டி பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே சண்முக சுந்தரபுரம், முத்து கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கரிசல்பட்டி, ஆசாரிபட்டி, ரோசனபட்டி உட்பட பல கிராமங்களில் இறவை பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி உள்ளது.
ஆண்டுக்கு இருமுறை மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர்.
விளைந்த மக்காச்சோளத்திற்கு கடந்த ஆண்டு குவின்டால் ரூ.2200 ஆக கிடைத்த விலை நடப்பாண்டில் ரூ.2850 வரை கிடைக்கிறது.
விலை கிடைப்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கரிசல்பட்டி விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடை சாகுபடியில் பிப்ரவரி, மார்ச் மாதத்திலும், மழைக்கால சாகுபடியில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்படுகிறது.
120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். 4 கிலோ விதை மக்காச்சோளம் ரூ.1800 வரை விலை உள்ளது.
இருமுறை உரம், இரு முறை மருந்து தெளிக்க செலவு அதிகமாகிறது. ஏக்கருக்கு 35 முதல் 40 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது.
ஏற்றுமதியால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்காச்சோளத்திற்கான விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதால் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.