/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழையை போல பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய ஆர்வம் ; விவசாயிகளுக்கு வழிகாட்டுமா வேளாண் வணிக துறை
/
வாழையை போல பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய ஆர்வம் ; விவசாயிகளுக்கு வழிகாட்டுமா வேளாண் வணிக துறை
வாழையை போல பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய ஆர்வம் ; விவசாயிகளுக்கு வழிகாட்டுமா வேளாண் வணிக துறை
வாழையை போல பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய ஆர்வம் ; விவசாயிகளுக்கு வழிகாட்டுமா வேளாண் வணிக துறை
ADDED : டிச 01, 2024 06:48 AM
கம்பம்: வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்வதைப் போல திராட்சை ஏற்றுமதிக்கு தேவையான உதவிகள் செய்ய வேளாண் வணிகம் மற்றும் தோட்டக்கலைத்துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், வாழை, திராட்சை, மா போன்ற பழப் பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறி பயிர்கள் உள்ளூர் தேவை, வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா மார்க்கெட்டிங் சென்டர்களாக உள்ளது. ஏற்றுமதியும் கணிசமாக செய்யப்படுகிறது. வாழைச் சாகுபடி மாவட்டம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்படுதிறது. செவ்வாழை, நாழிப்பூவன், நேந்திரன், ஜி 9, அதிக பரப்பில் உள்ளது. தற்போது செவ்வாழை மற்றும் நாழிப் பூவன் மட்டும் ஏற்றுமதியாகிறது.
ஆனால் அதிக பரப்பில் சாகுபடியாகும் திரட்சை ஏற்றுமதி செய்யப்படவில்லை.
கம்பம் பள்ளத்தாக்கிலும், சின்னமனூர் வட்டாரத்திலும் திராட்சை சாகுபடியாகிறது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் தாம்சன் விதையில்லா திராட்சை மற்றும் பன்னீர் திராட்சை என 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியாகிறது. இதில் பன்னீர் திராட்சையை ஏற்றுமதி செய்ய இயலாது என கூறி ஏற்றுமதி செய்யாமல் உள்ளனர்.
இது தொடர்பாக திராட்சை சாகுபடியாளர்கள் கூறுகையில், வாழை ஏற்றுமதி செய்யப்படுவது போல திராட்சையும் ஏற்றுமதி செய்ய அரசு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும், குறிப்பாக பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும். ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும் அரசிற்கு அந்நிய செலவாணி கிடைக்கும். கன்டெய்னர் கட்டண உயர்வுக்கு மானியம் தர வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக வட்டார வாரியாக திராட்சை விவசாயிகளை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேளாண் வணிகம் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.