/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
/
பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
ADDED : செப் 01, 2024 05:45 AM
தேனி, : அமைப்பு சார ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்கள், மூன்றாம்பாலின ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ அல்லது டாக்சி வாங்க தலா ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டம் உள்ளது.
நலவாரியத்தில் பதிவு செய்யாத பெண்கள், மூன்றாம் பாலின ஓட்டுநர்கள் தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். புதிய உறுப்பினர்கள் பதிவு செய்ய அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார், ரேஷன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், புகைப்படத்துடன் நேரில் வர வேண்டும் என சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.