sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோடையில் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றிக்கொள்வது நல்லது மாவட்ட உதவி சித்தா டாக்டர் ஆலோசனை

/

கோடையில் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றிக்கொள்வது நல்லது மாவட்ட உதவி சித்தா டாக்டர் ஆலோசனை

கோடையில் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றிக்கொள்வது நல்லது மாவட்ட உதவி சித்தா டாக்டர் ஆலோசனை

கோடையில் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றிக்கொள்வது நல்லது மாவட்ட உதவி சித்தா டாக்டர் ஆலோசனை


ADDED : மே 17, 2024 06:51 AM

Google News

ADDED : மே 17, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை இயங்கி வருகிறது. ரூ.6.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இம்மருத்துவமனை 2023 ஆக., 23ல் திறந்து பயன்பாட்டிற்கு வந்தது. மூன்று தளங்களுடன் வெளி நோயாளிகள் பிரிவு, 50 படுக்கைகளுடன் உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு உள்ளது.

இங்கு சித்தா, யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மூலம் பவுத்திரம் கட்டிகள் அறுவைச் சிகிச்சை அரங்கு, பக்கவாத மறுவாழ்வு மையம், தெரபி, தொக்கணம் அறை, அவசர சிகிச்சை அறை, ஆய்வறை, வர்மம், அக்குபஞ்சர், சூரியக்குளியல், மண் குளியல், யோகா பயிற்சிக் கூட்டம், பெண்கள் இயற்கை மருத்துவப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.

தற்போது நிலவும் கோடை வெயிலில் இருந்து நமது உடலை பாதுகாக்க திரவு உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், வாழ்வியல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என மாவட்ட உதவி சித்தா மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கரராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அவர் பேசியதாவது:

நம் உடலுக்கு ஏன் இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது, ஏன்.

நம் உடல் இயக்கம் உயிரியல் படைப்புகளிலேயே மிக அரிதான பல்வேறு அனிச்சை செயல்களை உள்ளடக்கிய தொகுப்பாகும். நம் உடல் இயக்கத்திற்கு பல்வேறு உறுப்புக்கள் இயங்குகின்றன. ஒட்டுமொத்த உடம்பே பல கோடிக்கணக்கான உயிருள்ள செல்களால் ஆனது.

இந்த செல்களுக்கு நாம் ஆக்சிஜன் கொடுக்க வேண்டும். பின் அவற்றிலிருந்து கழிவுகளை உடம்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கு போக்குவரத்து பிராசஸ் நடைபெற வேண்டும்.

இதற்கு உடலில் திரவ உணவுகள், குறிப்பாக தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. திடப்பொருளில் சத்துக்களை எளிதாக பிரிக்க இயலாது. அதனால் திரவத்தில் ரத்த நுண குழாய்கள் (Capillaries) வழியாக ஒவ்வொரு செல்லும் உணவை பெறுகிறது. கழிவையும் சேர்க்கிறது.

இதனால் தான் நமது எடையில் 60 சதவீதம் நீராக உள்ளது. உதாரணத்திற்கு செல்களுக்கு உள்ளே 30 லி., செல்களுக்கு வெளியே 12 லிட்டர், ரத்தமாக 5 லிட்டர். இந்த அளவுக்கு உடல் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி மாறுபடும். அதனால்தான் நமக்கு குடிநீர் அவசியமாகிறது.

உடலில் நீர்சத்து குறைவது எதனால்

உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் அதை நாம் டீஹடைிரேஷன் (dehydration) என்கிறோம். உடலுக்கு தேவையான தண்ணீர் குறைந்து விட்டால் நம்மால் சாதாரணமாக செயல்பட முடியாது. அதற்கான காரணங்களாக உடலில் இருந்து வியர்வை, சிறுநீர் கழிப்பது, உமிழ்நீர் துப்புவது, கண்களில் இருந்து கண்ணீர், இவ்வகையில் நீர் வெளியேறுகிறது. சிலர் நீர் குறைபாட்டை சமப்படுத்த அடிக்கடி நீர் குடித்து கொள்வது, நீர்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். இம்மாதிரியான உணவுகளை எடுக்கவில்லை என்றால் நீர் வறட்சி ஏற்படும்.

மேலும் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அதிக வியர்வை, சர்க்கரை நோயாளிகளின் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் நீர்சத்துக்கள் வெளியேறிவிடும்.

அறிகுறிகள் என்னென்ன

சிறிய அறிகுறிகளாக அதிக தாகம், தொண்டை வறண்டு போவது. தலைவலி, சிறுநீர் மஞ்சள் நிறமாக கழிப்பது, சிறுநீர் கழிப்பதில் குறைபாடு, சரும வறட்சி, சருமத்தில் வறட்சி காரணமான வெடிப்புகள் காணப்படும்.

அதிகமான அறிகுறிகளாக சிறுநீர்மஞ்சள் நிறத்தில் கழிப்பது, வேகமாக மூச்சு வாங்குவது, வேகமான இதயதுடிப்பு, சத்து குறைபாடு, துாக்கமின்மை, எரிச்சல், மயக்கம் ஆகியவை தென்படும். இவை அறிகுறியாக இருந்தால் தண்ணீர் பற்றாக்குறை என தெரிந்து கொண்டு, சித்தா மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.

நீராகாரங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து பருகுவது

நீர்மோர், இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவை பருகலாம். திரவ உணவுகளில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரக்காய், பூசணி, புடலங்காய் அதிகளவில் சேர்த்துக கொள்ள வேண்டும். பழ வகைகளில் தர்பூசணி, நுங்கு பானகம், கனிம சத்துக்கள் நிறைந்த சோடியம், பொட்டாஷியம், கால்சியம் ஆகிய சத்துக்களை உளளடக்கிய உணவு பொருட்களை சாப்பிடுவது கட்டாயம். மூலிகைகளில் திருநீற்று பச்சிலை விதை, (ஜப்தா விதை) கலந்த தண்ணீர் பருகுவது மிகச்சிறந்த பயனளிக்கும்.

கோடையில் வாழ்வியல் பழக்கங்களை மாற்ற வேண்டுமா.

கோடை காலத்தில் திரவ உணவுகளை உட்கொள்வது பலன் அளித்தாலும், வாழ்வியல் பழக்கங்களான இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது அவசியம். பென்சில் பிட், ஜீன்ஸ் வகைகளை அணியக்கூடாது.

பருவ கால பழங்களை சாப்பிடுவது சிறந்த பயனளிக்கும். இதனால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். அதனால்தான் வாழ்வியல் பழக்கத்தை கோடை காலங்களில் மாற்றிக் கொள்வது அவசியம். இதில் மிக முக்கியமாக நேரத்திற்கு துாக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் துாங்க வேண்டும்

பிறந்த குழந்தை 18 மணி நேரம் துாங்கும். குழந்தை வளர வளர துாங்கும் நேரம் குறையும், வயது கூடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 8 மணி நேர உடல் ஓய்வு நமக்கு கட்டாயம். அப்போதுதான் உடலில் பல இயக்கங்கள் நடக்கும். நம்மில் பெரும்பாலானவர்கள் துாக்கத்தை அலைபேசி, ஸ்மார்ட் போன்களில் கழிக்கின்றனர்.இதனால் கண்பார்வை பறிபோக வாய்ப்புண்டு. அதனால் நேரத்திற்கு இரவு 10:00 மணிக்கு துாங்கி, அதிகாலை 5:00 மணிக்கு எழுந்திருப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இதுநல்ல பயனளிக்கும், என்றார். கூடுதல் விபரங்கள் பெற 99658 97075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us