/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை
/
மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை
ADDED : மே 12, 2024 04:10 AM

தேனி: மாவட்டத்தில் தொடர்ந்து 4வது நாளாக கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த சூழலில் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கியது.
அதன் பின் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஆங்காங்கே பலத்த காற்று, சாரல் மழை என பெய்து வந்தது. மே 8 ல் மாவட்டத்தில் பரவலாக மின்னலுடன் கனமழை பெய்தது.
தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் பல இடங்களில் கன மழை பெய்தது.
தேனி நகர்பகுதியில் மாலை 4:00 மணியளவில் துவங்கிய மழை ஒருமணிநேரம் பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வீரபாண்டியில் 12.4 மி.மீ., மழை பதிவானது. கூடலுாரில் 1.8 மி.மீ., பெரியாறு அணையில் 0.8 மி.மீ., தேக்கடியில் 0.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.