/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் அரங்குகளை பார்வையிட்ட நீதிபதிகள்
/
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் அரங்குகளை பார்வையிட்ட நீதிபதிகள்
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் அரங்குகளை பார்வையிட்ட நீதிபதிகள்
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் அரங்குகளை பார்வையிட்ட நீதிபதிகள்
ADDED : பிப் 15, 2025 06:42 AM

உத்தம பாளையம், : உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமில் அமைக்கப்பட்ட அரங்குகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் துவக்கி வைத்தார். நிரந்த மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரஜினி குத்து விளக்கேற்றினார். உத்தமபாளையம் சப் ஜட்ஜ் சிவாஜி செல்லையா வரவேற்றார். மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், மாஜிஸ்திரேட் ராமநாதன், விரைவு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சமூக நலத்துறை, தீயணைப்பு துறை, மகளிர் போலீஸ், டிராபிக் போலீஸ், வட்டார போக்குவரத்து குறை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளும், தொண்டு நிறுவனங்களின் அரங்குகள் அமைத்திருந்தனர்.
அரங்குகளை பார்வையிட்ட நிரந்த மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரஜினி விளக்கம் கேட்டார் . சித்தா டாக்டர்களிடம் அமுக்ரா கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய கேள்விக்கு டாக்டர்கள் விளக்கமளித்தனர். தொண்டு நிறுவனங்களின் செயல்படுகளை கேட்டறிந்தார். காய்கறி ஸ்டாலில் இருந்த சிறுவனிடம் குழந்தை தொழிலாளர் சட்டம் பற்றியும் விளக்கினார். பழகுநர் வாகனம் பற்றி மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமனிடம் கேட்டார். இது போன்ற வசதி ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் இருப்பது எனக்கே தெரியாதே. பின் எப்படி பொதுமக்களுக்கு தெரியும். இந்த வசதி எப்போது அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.
பதிலளித்த வாகன ஆய்வாளர், நடைமுறைக்கு வந்து ஓராண்டாகிறது என்றார்.
விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கோர்ட் நடைமுறைகள் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

