/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தில் பராபட்சம் உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தில் பராபட்சம் உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தில் பராபட்சம் உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தில் பராபட்சம் உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
ADDED : ஆக 24, 2024 05:12 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் ஒரு பகுதிக்கு சுத்திகரிப்பட்ட குடிநீர்,மறுபகுதிக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர்வழங்கி பராபட்சம் காட்டுவதாகவும், பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயர்த்த தகுதி வாய்ந்த பேரூராட்சியாக உத்தமபாளையம் உள்ளது. 18 வார்டுகளை கொண்ட இப் பேரூராட்சியில் 35 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது.
இப்பேரூராட்சி தாலுகா தலைநகராகவும், கோட்டாட்சியர் தலைமையிடமாகவும், மாவட்ட முனிசிப் கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட், சப் -கோர்ட் என ஒருங்கிணைந்த நீதிமன்றங்களும் உள்ளன.
பேரூராட்சியில் பி.டி.ஆர். காலனி, இந்திரா நகர், தென்றல் நகர், தாமஸ் காலனி, மின் நகர், அன்னை நகர், அப்துல்கலாம் நகர், பி.எஸ்.ஆர். நகர், காயிதேமில்லத் நகர், பென்னிகுக் நகர் என விரிவாக்க பகுதிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
குடிநீர் வினியோகத்தில் பாராபட்சம்
நகரில் லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், ஞானம்மன் கோயில் படித்துறையில் சுத்திகரிக்ப்படாத குடிநீரும் சப்ளையாகிறது.
நகரின் ஒரு பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்டும், மற்றொரு பகுதிக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் என பேரூராட்சி நீண்ட காலமாக பாகுபாடு காட்டுகிறது.
குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையாகிறது.
ஆனால் மற்ற பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் தண்ணீரை சேகரித்தால் மஸ்தூர் பணியாளர்கள் மூலம் குடிநீரை இருப்பு வைக்க கூடாது என விரட்டுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் தனியார் கேன் குடிநீரை நாடி செல்ல வேண்டியுள்ளது.
பஸ் ஸ்டாண்டில் வசதி இல்லை
குப்பை சேகரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பில் சுணக்கம் உள்ளது. புதூர், களிமேட்டுப்பட்டி, ஆர்.சி. தெருக்கள், விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்கு பழுதடைந்தால் சீரமைப்பிற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுக்கழிப்பறைகள் இல்லை. ஆண்கள் பொதுகழிப்பறை போதியளவு இல்லை. 24 கழிப்பறைகள் இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லை.
'ஜல்ஜீவன்' திட்ட பணிகள் துவங்கி ஒராண்டிற்கு மேலாகியும் நிறைவு பெறவில்லை. பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பேரூராட்சி, அங்கு அடிப்படை வசதி செய்வதையும், பயணிகளை பற்றி கவலைப்படுவதே இல்லை. இதனால் இரவில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
பராமரிப்பு இல்லாத ரோடு
வாரச்சந்தை பைபாஸ் சந்திப்பில் நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு, மேற்கு ரத வீதிகள், மெயின் பஜார் வீதி பராமரிப்பு செய்து 15 ஆண்டுகளை கடந்து விட்டது. பெரிய அளவில் வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் நடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. பி.டி.ஆர். காலனி , இந்திரா நகர், காயிதே மில்லத் நகர், அப்துல் கலாம் நகரில் பல வீதிகள் மண் சாலைகளாக உள்ளது. மழை வந்தால் ரோடு சகதியாக மாறி மக்கள் அவதிப்படுகின்றனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்
அசோக், சமூக ஆர்வலர், உத்தமபாளையம் : குடிநீர் சப்ளை 15 நாட்களுக்கு ஒரு முறை உள்ளதை மாற்ற வேண்டும் . தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. கம்பளி பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் முருங்கை மரம் இருந்தால் தான் கம்பளி பூச்சி வரும். இப்போது வீடுகளுக்குள் கம்பளி பூச்சிகள் வருகிறது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. வாரச்சந்தை ரோட்டில் நடப்பதை தவிர்க்க, வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்.
பூட்டி வைத்துள்ள பூங்கா
பரசுராமன், உத்தமபாளையம் : பேரூராட்சியில் ரோடுகள் மிக மோசம். குடிநீர் வினியோகத்தில் உள்ள பாகுபாடு பற்றி கேட்டால் ஜல்ஜீவன் வந்தால் பிரச்னை இருக்காது என்கின்றனர். ஆனால் அப்பணி முடிவது எப்போது என்றே தெரியவில்லை. பஸ் ஸ்டாண்ட் பராரமரிப்பு இல்லை. இந்திரா நகரில் பூட்டி வைத்துள்ள பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

