/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
/
கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
ADDED : மார் 07, 2025 08:08 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் , மாவட்ட முனிசிப் கோர்ட், சப் கோர்ட், விரைவு நீதிமன்றம் ஆகியவைகள் செயல்படுகிறது. உத்தமபாளையம், கூடலூர், கம்பம், சின்னமனூர், தேவாரம் , மேகமலை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து தங்களின் வழக்குகளுக்காக உத்தமபாளையம் வருகின்றனர். உத்தமபாளையம் வட்டாரத்தை சேர்ந்தவர்களின் 60 சதவீதம் சிவில், கிரிமினல் வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது. உத்தமபாளையம் பகுதியிலிருந்து மாவட்ட நீதிமன்ற வாய்தாவிற்கு செல்பவர்கள், வழக்கறிஞர்களும் குறைந்தது ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெரியகுளத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஒன்று அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கறிஞர்கள் சார்பில் அரசிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் கூறுகையில், 'உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க பார் அசோசியேஷன்கள் மனு கொடுத்துள்ளனர். கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் உடனடியாக அமைக்க வாய்ப்புள்ளது. எனவே மாநில அரசு பொதுமக்கள், வழக்கறிஞர்களின் நலன் கருதி, உத்தமபாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றார்.