ADDED : செப் 08, 2024 05:06 AM

மூணாறு: விற்பனைக்கு காரில் மதுபானங்களை கடத்தியவரை கலால்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை செப்.15 ல்கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி கள்ளச்சாராயம், எரிசாராயம், மது பானங்கள் உள்பட போதை பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். அதனை தடுக்கும் வகையில் இடுக்கி மாவட்டத்தில் கலால்துறை, போலீசார் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வருகின்றது.
இந்நிலையில் மூணாறு அருகே மறையூர் அருகே திண்டிகொம்பு பகுதியைச் சேர்ந்த செல்வின் ஜெபராஜ் 45, மதுபானங்களை விதி மீறி மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனைக்கு சப்ளை செய்து வந்தார். அவரை ஒரு வாரமாக கலால்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனிடையே தேவிகுளம் கலால் துறை உதவி இன்ஸ்பெக்டர் அப்துல்லாகுஞ்சு தலைமையில் கலால்துறையினர், வனத்துறையினர் இணைந்து நேற்று முன்தினம் இரவு வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்வின்ஜெபராஜ் காரில் மதுபானங்களை கடத்தி வந்தார். 25 லிட்டர் மதுபானங்களை கைப்பற்றிய செல்வின்ஜெபராஜை கைது செய்தனர். காரை பறிமுதல் செய்தனர்.