/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சிகள் திணறல்; அணையில் 200 கனஅடி நீர் திறக்க வலியுறுத்தல்

ADDED : ஏப் 30, 2024 12:25 AM
கம்பம் : முல்லைப் பெரியாற்றி லிருந்து குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் தலை மதகு பகுதியில் தேனி மாவட்டம் இருப்பதால் எந்த காலத்திலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.
இதற்கு காரணம் பெரியாறு அணையில் தேனி, மதுரை மாவட்ட குடிநீருக்கு தேவையான தண்ணீர் எப்போதும் கையிருப்பில் இருக்கும்.
ஆனால் இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் குடிநீர் நுகர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் அணையிலிருந்து 105 கன அடி மட்டுமே விடுவிக்கப்படுகிறது. அதில் மதுரை குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்திற்கென 20 கன அடி எடுத்துக் கொள்கின்றனர்.
மீதமுள்ள 80 கன அடியில் லோயர்கேம்பில் உள்ள பல்வேறு ஊர்களின் பம்பிங் ஸ்டேஷன்கள் பம்பிங் செய்து கொள்கிறது. ஆற்றில் மிக குறைவான அளவு தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது.
இதனால் உத்தமபாளையம், ஓடைப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், சீலையம்பட்டி, எல்லப்பட்டி, சுருளிப் பட்டி, கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பம்பிங் ஸ்டேஷன்களால் போதிய நீரை பம்பிங் செய்ய இயலவில்லை. இதனால் பெரும்பாலான ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே பெரியாறு அணையிலிருந்து குடிநீருக்கென விடுவிக்கப்படும் குடிநீரின் அளவை 105 கன அடியிலிருந்து 200 கன அடியாக அதிகரிக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.