/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் குறைந்த வெள்ளம்: குளிக்க அனுமதி
/
சுருளி அருவியில் குறைந்த வெள்ளம்: குளிக்க அனுமதி
ADDED : மே 27, 2024 05:57 AM
கம்பம் : சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை தொடர்ந்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையும் பெய்ய துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சுருளி அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று முன்தினம் காலை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. நேற்று காலை அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தது. எனவே அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

