/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதையில்லா திராட்சை வரத்து குறைவு; பன்னீர் திராட்சை விலை உயர வாய்ப்பு
/
விதையில்லா திராட்சை வரத்து குறைவு; பன்னீர் திராட்சை விலை உயர வாய்ப்பு
விதையில்லா திராட்சை வரத்து குறைவு; பன்னீர் திராட்சை விலை உயர வாய்ப்பு
விதையில்லா திராட்சை வரத்து குறைவு; பன்னீர் திராட்சை விலை உயர வாய்ப்பு
ADDED : ஏப் 24, 2024 12:17 AM
கம்பம் : வட மாநிலங்களில் இருந்து சில மாதங்களாக வந்து கொண்டிருந்த விதையில்லா திராட்சை வரத்து குறையத் துவங்கி உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பன்னீர் திராட்சை விலை உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது.
கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சை, ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. இருந்தபோதும் 90 சதவீத பகுதிகளில் பன்னீர் திராட்சையே பிரதானமாக சாகுபடியாகிறது.
ஆண்டுதோறும் நவ., இறுதியில் வடமாநிலங்களில் இருந்து விதையில்லா திராட்சை தமிழகத்திற்கு வரத்து ஆரம்பமாகும். தொடர்ந்து மார்ச் இறுதி வரை இருக்கும். அதேபோல் இந்தாண்டு விதையில்லா திராட்சை வரத்து குறைய துவங்கியுள்ளது.
விதையில்லா திராட்சை வரத்து துவங்கியவுடன் பன்னீர் திராட்சையின் விலை சரிந்து விடும். தற்போது விதையில்லா திராட்சை வரத்து குறைய துவங்கி உள்ளது. எனவே பன்னீர் திராட்சை விலை உயரத் துவங்கியுள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.40 முதல் 45 என்றிருந்த பன்னீர் திராட்சை தற்போது கிலோ ரூ.50 முதல் 55 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுருளிப் பட்டி திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், 'வழக்கம் போல மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை வரத்து குறைந்தவுடன் பன்னீர் திராட்சை விலை அதிகரிக்கும். தற்போது ரூ.50 விலை கிடைக்கிறது. படிப்படியாக உயர்ந்து ரூ.100 வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் 3 மாதங்களுக்கு பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.', என்றார்.

