/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா; நகராட்சி சீரமைக்க கோரிக்கை
/
பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா; நகராட்சி சீரமைக்க கோரிக்கை
பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா; நகராட்சி சீரமைக்க கோரிக்கை
பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா; நகராட்சி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 12:26 AM

போடி : போடி அம்மாகுளத்தில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்களால் சூழ்ந்த சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளது.
போடி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாகுளத்தில் ரூ.17 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான பூங்கா 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பூங்காவில் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள், பெரியோர் ரிலாக்ஸாக அமர்ந்து செல்லவும், இரவில் மின்னொலியில் ஜொலிக்கும் அலங்கார விளக்குகள், பூச்செடிகள் அமைக்கப்பட்டன. இங்கு விளையாட வரும் சிறுவர்களிடம் நகராட்சி கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வீதம் தினமும் ரூ. ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டது.
அதன் பின் நகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால் ஜம்பிங் கூடாரம், ராட்டினம், இருக்கைகள், மின்விளக்குகள் சேதம் அடைந்து உள்ளன. தளவாட பொருட்கள் திருடப்பட்டு, பூங்கா முழுவதும் செடிகள் ஆக்கிரமிப்பு, குப்பை தேக்கமாக உள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக விளங்கி வருகிறது. இதனால் நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பூங்காவை மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.பயன்பாடு இன்றி உள்ள சிறுவர்களுக்கான பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.