/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மெட்ரிக், சி.பி.எஸ்.இ.,பள்ளி விளையாட்டு விழா
/
மெட்ரிக், சி.பி.எஸ்.இ.,பள்ளி விளையாட்டு விழா
ADDED : செப் 07, 2024 06:45 AM
தேனி: கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ., சீனியர் செகன்டரி பள்ளிகள் சார்பில் விளையாட்டு விழா பள்ளி தலைவர் முத்துக்கோவிந்தன் தலைமையில் நடந்தது.
செயலாளர் கிருத்திகாபாபு முன்னிலை வகித்தார். மாணவி தாரணி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். ஒலிம்பிக் கொடியை பள்ளி இயக்குனர் ரேணுகாதேவியும், தொழிலதிபர் தாமோதரன் பள்ளிக் கொடியை ஏற்றினார். பள்ளி பொருளாளர் முரளிதரன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளியின் இயக்குனர்கள் குமார், அரவிந்தன், ஷியாம், விவேதா, ஹர்சவர்தன், சரண் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி சீனியர் முதல்வர் சுபாஈஸ்வரி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஹேமா கண்ணகி ராணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்திருந்தனர். பள்ளி விளையாட்டுக்குழு தலைவர் மாணவர் தாருகேஷ்வரன் நன்றி கூறினார்.