/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான உலோக சிலைகள் திருட்டு
/
பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான உலோக சிலைகள் திருட்டு
பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான உலோக சிலைகள் திருட்டு
பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான உலோக சிலைகள் திருட்டு
ADDED : மே 03, 2024 06:19 AM
தேனி: தேனி அருகே கோடாங்கிபட்டி பண்ணை வீட்டில் ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள உலோக சிலைகள், ஏ.சி.,களை திருடிச் சென்றவர்கள் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை நேதாஜி மெயின் ரோடு சோமசுந்தரம் மனைவி தேன்பழம் 66. மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் டயர் நிறுவன உரிமையாளர். இவரது மகன் பாலாஜிக்கு பழனிசெட்டிபட்டியில் டையர் கடை வைத்து கொடுத்துள்ளார். அதனால் பாலாஜிக்கு கோடாங்கிபட்டி பண்ணை வீட்டில் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார். பாலாஜி வியாபார பணிகளுக்காக 6 மாதங்களுக்கு முன் நாகர்கோவிலுக்கு சென்று தங்கி இருந்தார். ஆறு மாதங்களாக பூட்டியிருந்த வீட்டை தேன்பழம் சென்று பார்த்தார். அப்போது உள்வீட்டில் படுக்கையறை கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள பித்தளையிலான கண்ணன் ராதை விக்ரஹம், பிரீஷர் பாக்ஸ், 2 டன் ஏ.சி., தங்கமுலாம் பூசிய விநாயகர் சிலை, 12 கிலோ எடையிலான 2 அடி உயர பித்தாளை விநாயகர் சிலை, 6 கிலோ எடையளவு உள்ள பித்தாளையிலான லட்சுமி சிலை ஆகிய உலோக சிலைகள் திருடுபோயிருந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., திருமணிமாறன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.