ADDED : ஆக 22, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: உலக கொசுக்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் நடத்தினார்கள்.
காந்தி கிராம பல்கலை.வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் அன்பு நிதி, ஜெகதீஷ், விவேகானந்தன், மனோ, ஹரிஹரன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் சுருளிப்பட்டி ஊராட்சியில் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை விளக்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முத்துக்கருப்பணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கொசு ஒழிப்பு, கொசுக்களால் ஏற்படும் பாதிப்புக்கள், கொசுவை அழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்றனர்.