/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவணங்களை திருடியதாக தாய் புகார் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
/
ஆவணங்களை திருடியதாக தாய் புகார் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ஆவணங்களை திருடியதாக தாய் புகார் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ஆவணங்களை திருடியதாக தாய் புகார் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 02:46 AM
தேனி:சொத்து ஆவணங்களை திருடி சென்றதாக தாயார் புகாரில் சென்னை கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், அம்மாபட்டி மார்க்கையன்கோட்டை ரோடு வடக்குத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் 78. சிறைத்துறை டி. ஐ.ஜி.,யாக பணியாற்றி சென்னையில் ஓய்வு பெற்றபின் இறந்தார். இவரது மனைவி இந்திராணி 75. இவர்களுக்கு சுமதி, மனோஜ்குமார், விஜயகுமார், ஜெயந்தி என மகன்கள், மகள்கள் உள்ளனர்.
மனோஜ்குமார் தற்போது சென்னை கலால் மற்றும் சுங்கத்துறை இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திராணிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப்பின் அம்மாபட்டி இந்திராணி வீட்டில் தங்கினார். அப்போது அங்கு வந்த மனோஜ்குமார் சொத்து ஆவணங்களை திருடிச் சென்றதாகவும், இதுகுறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இந்திராணி புகாரில் மனோஜ்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் எஸ்.ஐ., முஜிபுர்ரஹ்மான் வழக்குப் பதிந்துள்ளார்.