/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய் தடுப்புச் சுவர் இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
/
கண்மாய் தடுப்புச் சுவர் இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
கண்மாய் தடுப்புச் சுவர் இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
கண்மாய் தடுப்புச் சுவர் இன்றி வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஆக 13, 2024 12:31 AM

போடி : போடி மீனாட்சிபுரம் விசுவாசபுரம் செல்லும் ரோட்டில் மீனாட்சியம்மன் கண்மாயை ஒட்டி தடுப்புச் சுவர் இல்லாமல் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களில் செல்வது தொடர்கிறது.
போடியில் இருந்து விசுவாசபுரம் பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி கிராமங்களுக்கு மீனாட்சியம்மன் அருகே உள்ள ரோட்டின் வழியாக செல்ல வேண்டும்.
தற்போது கண்மாயில் நீர் நிரம்பிய நிலையில் கண்மாயை ஒட்டி தடுப்புச் சுவர் இல்லை. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது பலத்த காற்று வீசும்போது டூவீலரில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த ரோட்டில் மின் வசதி இல்லாத நிலையில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கண்மாய்க்குள் விழும் அபாயம் உள்ளது.
விவசாயிகள், பொது மக்கள் பயன் பெறும் வகையில் மீனாட்சியம்மன் கண்மாயை ஒட்டி தடுப்புச் சுவர், தற்காலிக இரும்பு தகடிலான தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை பயன்படுத்தும் மக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.