/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் வண்டிப்பெரியாறில் காங்., உண்ணாவிரதம் தமிழக விவசாயிகள் செப்.22ல் குமுளியில் முற்றுகை
/
முல்லைப்பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் வண்டிப்பெரியாறில் காங்., உண்ணாவிரதம் தமிழக விவசாயிகள் செப்.22ல் குமுளியில் முற்றுகை
முல்லைப்பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் வண்டிப்பெரியாறில் காங்., உண்ணாவிரதம் தமிழக விவசாயிகள் செப்.22ல் குமுளியில் முற்றுகை
முல்லைப்பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் வண்டிப்பெரியாறில் காங்., உண்ணாவிரதம் தமிழக விவசாயிகள் செப்.22ல் குமுளியில் முற்றுகை
ADDED : செப் 14, 2024 10:59 PM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் காங்., சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதனைக் கண்டித்து தமிழக விவசாயிகள் செப். 22ல் குமுளியில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் மீண்டும் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது.
கேரளா வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவத்திற்கு பின் முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என கேரள தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் அணை அருகே புதிய அணை கட்டியே தீருவோம் என பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இடுக்கி எம்.பி., குரியாகோஸ் இப்பிரச்னையை வலியுறுத்தி பார்லியில் குரல் எழுப்பினார். பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது தற்போது கேரளாவில் அனைத்து அரசியல்வாதிகம், மக்களிடையே பேசும் பொருளாகி விட்டது.
இன்று உண்ணாவிரதம்
இந்நிலையில் இடுக்கி மாவட்ட காங்., சார்பில் இன்று வண்டிப் பெரியாறில் உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்ட தலைவர் மாத்யூ தலைமையில் எம்.பி., டீன் குரியாகோஸ் துவக்கி வைக்கிறார். வழக்கம்போல் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை கேரளாவில் அரசியலாக்கி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
கேரள எல்லையில் முற்றுகையிட முடிவு
இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கமும் செப். 22ல் குமுளி எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் இப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது.
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்: முல்லைப் பெரியாறு அணை குறித்து பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுக்குப் பின் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளாவில் தொடர்ந்து பல விஷம பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநில காங்., இடதுசாரி கட்சிகள், பா.ஜ., கத்தோலிக்க இளைஞர் இயக்கம், கத்தோலிக்க காங்., ஆர்.எஸ்.பி., கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் கேரளாவில் புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசும் இதுவரை முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து செப். 22ல் குமுளி எல்லையை முற்றுகையிட உள்ளோம் என்றார்.