ADDED : மே 05, 2024 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமாசபையினர், பங்களாபட்டி பிரிவு, தாமரைக்குளம் ஈத்கா மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். தலைவர் உமர்அலி தலைமை வகித்தார். தாமரைக்குளம் தலைவர் ஹக்கீம் ராஜா முன்னிலை வகித்தார். வட்டார ஜமாஅத்துல் உலமாசபை நிர்வாகிகள் அகமது பவுஸ்தீன், ரியாஸ்தீன், நிஜாமுதீன், உஸ்மான் அலி, ஆலிம் அகமது முஸ்தபா, ஆஷிக்அகமது மற்றும் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், நிர்வாகிகள் உட்பட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.