ADDED : ஆக 11, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேவாரம் தம்பிநாயக்கன்பட்டி மாரியம்மாள் 65.
இவரது கணவர் இறந்து விட்டதால் தங்கை நாகம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறார். பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ரோட்டை கடந்த போது, கொண்டமநாயக்கன்பட்டி கனிராஜா ஓட்டி வந்த டூவீலர் மோதி காயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.