/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பை குவிந்து புதர் மண்டிக் கிடக்கும் பேரூராட்சி முத்தமிழ் பூங்கா
/
குப்பை குவிந்து புதர் மண்டிக் கிடக்கும் பேரூராட்சி முத்தமிழ் பூங்கா
குப்பை குவிந்து புதர் மண்டிக் கிடக்கும் பேரூராட்சி முத்தமிழ் பூங்கா
குப்பை குவிந்து புதர் மண்டிக் கிடக்கும் பேரூராட்சி முத்தமிழ் பூங்கா
ADDED : ஜூலை 01, 2024 06:24 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சியில்- தெப்பம்பட்டி ரோட்டில் உள்ள முத்தமிழ் பூங்கா பராமரிப்பின்றி குப்பை குவிந்து புதர் மண்டியுள்ளது.
இப்பூங்கா 2006ல் பயன்பாட்டிற்கு வந்தது. ஆண்டிபட்டி பொது மக்கள், கிராமங்களில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்து செல்பவர்கள் ஓய்வுக்காக இதனை பயன்படுத்தினர்.
காலை, மாலை நேரங்கள், விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வருபவர்கள் பூங்காவை சிறிது நேரம் பொழுது போக்கிற்கு பயன்படுத்தினர். தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. செடிகள், மரங்கள் பராமரிப்பு இன்றி சில ஆண்டுகள் பூங்காவை பூட்டி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரூராட்சி மூலம் பூங்கா பராமரிப்பு செய்யப்பட்டு புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
பூங்கா பராமரிப்பிற்கு ஆட்கள் நியமிக்கப் படவில்லை. தற்போது பூங்காவில் மரம், செடி, கொடிகள் புதர் போல் வளர்ந்து பல இடங்களில் குப்பை குவிந்துள்ளது.
காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பூங்காவின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. பூங்காவில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் பொது மக்கள் பூங்காவை தொடர்ந்து பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். பூங்கா பராமரிப்பிற்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஆட்கள் நியமித்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பூங்காவை ஓய்வு நேரங்களில் பயன்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். போலீசாரும் அப்பகுதியில் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.